என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெயிண்டர் தற்கொலை"
கோவை:
கோவை வேலாண்டி பாளையம் ஆனந்தா காலனியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 30). பெயிண்டர். இவருக்கு பெற்றோர் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் மணிகண்டன் ஆர்.எஸ். புரத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
நேற்று இரவு மணிகண்டன் வேலை செய்யும் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அங்குள்ள காவலாளி ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோன்று கோவை போத்தனூர் சீனிவாசா நகரை சேர்ந்தவர் மோகன் (54). இவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார். போத்தனூர் பாரதி நகரை சேர்ந்த அந்தோணி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:
பல்லடம் மங்கலம் ரோடு காமராஜர் நகரை சேர்ந்தவர் அப்பாஸ் (வயது 38) பெயிண்டர். இவரது மனைவி ரமீலா (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அப்பாசுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவி கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அப்பாஸ் தனது தாய் சைனாவுடன் வசித்து வந்தார். மனைவி, குழந்தைகளை பிரிந்த அப்பாஸ் விரக்தியில் மது குடித்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று இரவு அப்பாஸ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பல்லடம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலாஜா:
வாலாஜா அருகே உள்ள வி.சி.மோட்டூர் எம்.பி.டி. ரோட்டை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 24). பெயிண்டர் வேலை செய்து வந்தார். நேற்று மதுஅருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் அவரது பெற்றோருடன் தகராறு ஏற்பட்டது.
இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வாலாஜா போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள அனுப்பப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 50). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணியின் போது தவறி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டது. காயம் சரியாகாததால் வேலைக்கு செல்ல முடியாமல் வருமானமின்றி பாண்டி வேதனையுடன் காணப்பட்டார்.
இந்த நிலையில் அங்குள்ள தோட்டத்தில் பாண்டி விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே பாண்டி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாண்டி மனைவி நாகம்மாள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை திப்புராயப்பேட் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் லூர்து நாதன் பெயிண்டர் (வயது 34). இவரது மனைவி சோபியா (33). தனியார் கூட்டுறவு வங்கி ஊழியர். இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
லூர்துநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார்.
அதேபோல் நேற்றும் லூர்துநாதன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் மனைவி திட்டினார். இதில் மனமுடைந்த லூர்துநாதன் வம்பாகீரப் பாளையம் செஞ்சி சாலையில் உள்ள பொதுப்பணித்துறை குடோனில் நைலான் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த சோபியா வீட்டில் கணவர் இல்லாததால் தேடினார். அப்போது குடோன் அருகே விளையாடிக்கொண்டு இருந்த சிறுவர்கள் லூர்துநாதன் தூக்கில் தொங்குவதை கண்டு சோபியாவுக்கு தகவல் கொடுத்தனர்.
இதுகுறித்து சோபியா ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி, நாராயணசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
முள்ளக்காடு:
தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் எம். தங்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32). பெயிண்டர். இவரது மனைவி புஷ்பலதா(27). மாரிமுத்துவுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. சமீப காலமாக கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் கணவரிடம் கோபித்து கொண்டு புஷ்பகலா, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்த மாரிமுத்து நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து தற்கொலை செய்த மாரிமுத்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டை பிரான்சுவாதோப்பு 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (வயது47), பெயிண்டர். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள ராமு அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு வந்ததால் ராமுவுக்கும், அவரது மனைவி பிருந்தாவுக்கும் தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று இரவும் இதுபோல ராமு மதுகுடித்துவிட்டு வந்ததால் கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராமு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் ஆஸ்பெட்டால் கூரை இரும்பு பைப்பில் ராமு துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்